வடக்கு வாசல் முதல் இதழில் துவங்கி, பல இதழ்களில் வெளிவந்த பல்வேறு அறிஞர் பெருமக்களின் தொகுப்பு இந்த நூல். டெல்லி மட்டும் அல்லாது பல்வேறு இந்தியப் பெருநகரங்களில் இருந்து வந்த அறிஞர்கள், நாட்டியக் கலைஞர்கள், விஞ்ஞானிகள், சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் நேர்காணல்கள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
டெல்லியின் முன்னாள் தலைமைச் செயலர் ரெகுநாதன், கட்டடவியல் அறிஞர் எஸ்.இராமமிருதம், மூத்த எழுத்தாளர் ஏ.ஆர்.ராஜாமணி, மொழிபெயர்ப்பாளர் ஹெச்.பாலசுப்பிரமணியன், அருட்செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம், சமையல் கலைஞர் சுல்தான் மொய்தீன், ஒலி வடிவமைப்பாளர் எஸ்.மனோகரன், பொள்ளாச்சி கணேசன், நீரியல் வல்லுனர் ராமஸ்வாமி அய்யர், சுற்றுச்சூழல் விஞ்ஞானி டாக்டர் ராஜாமணி, பேராசிரியர் கி.நாச்சிமுத்து, பரதக்கலைஞர் ஜஸ்டின் மெக்கார்த்தி, கொல்கத்தா கிருஷ்ணமூர்த்தி, ஜி.பாலச்சந்திரன், ஐஏஎஸ் ஆகியோரின் நேர்காணல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
இந்த நேர்காணல்கள் தமிழ்ச் சூழலில் பெருமளவு பேசப்பட்டவையாகும். சுரேஷ் சுப்பிரமணியம் இந்த நூலுக்கு முன்னுரை வழங்கி இருக்கிறார்.