ராகவன் தம்பி என்னும் பெயரில் வடக்கு வாசல் ஆசிரியர் கி.பென்னேஸ்வரன் எழுதிய பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பு. ஆசிரியரின் நாடக மேடை அனுபவங்கள், கோமல் சுவாமிநாதன், சி.சு.செல்லப்பா, க.நா.சுப்பிரமணியன் போன்ற இலக்கியச் சிற்பிகளுடன் எதிர்கொண்ட அனுபவங்கள், பட்டிமன்றங்கள், கவியரங்கங்கள், குழந்தைகளின் உளவியல், கிருஷ்ணகிரி மற்றும் டெல்லி வாழ்க்கையில் இவர் சந்தித்த அனுபவங்களை சற்றே அங்கதம் கலந்த தொனியில் அலசும் கட்டுரைகளின் தொகுப்பு.
இலக்கிய விமர்சகர் வெங்கட்சாமி நாதன் இந்த நூலுக்கு முன்னுரை எழுதியிருக்கிறார்.