இந்நாவல் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முந்திய யாழ்ப்பாணச் சமூகத்தைச் சிறப்பாக பெண்களின் வாழ்வியல் அம்சங்களை விளங்கிக்கொள்ள உதவும். இந்நாவல் அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்று விளங்கிய ஜே.டபிள்யூ. பார் குமாரகுலசிங்க முதலியாரின் மகளும், புகழ்பூத்த சட்டத்தரணியாக விளங்கிய ஐசாக் தம்பையாவின் மனைவியுமான மங்களநாயகம் தம்பையா அவர்களினால் 1914 ஆம் ஆண்டு எழுதப்பட்டு வெளிவந்தது என்பது குறிப்பிடத் தக்கது.