தமிழ்ப் பதிப்புலக முன்னோடிகளில் முதல்வரான சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்கள் பதிப்பித்த நூல்களுக்கு எழுதிய நூல் பதிப்புரைகளின் தொகுப்பே இந்நூல். மேலும் சி.வை.தா வின் சுருக்கமான வரலாறும் இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளது. இவரின் பதிப்புரைகள் பலதுறைப்பட்ட ஆராய்ச்சிகளைக்கொண்டவை. ஆய்வு மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டல்களைத் தரக்கூடியவை. 1950 ஆம் ஆண்டு சி.கணபதி பிள்ளை ஈழகேசரி இதழில் எழுதிய தொல்காப்பியப் பதிப்பு - தமிழ் தந்த தாமோதரம்பிள்ளையின் பரமோபகாரம் என்ற கட்டுரை இந்நூலில் அநுபந்தமாக இணைக்கப்பட்டுள்ளது.
-
மனமகிழ் தாமோதரன் - புலவர் நா.சிவபாதசுந்தரனார்
-
அணிந்துரை - பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை
-
தாமோதர வரலாறு - சிறுபிட்டி இ.செல்லத்துரை
-
சி.வை.தா வரலாற்றுச் சுருக்கம்
-
வீரசோழியப் பதிப்புரை
-
வீரசோழியப் பதிப்புப் பற்றிய சிறப்புக் கவிகள்
-
கலித்தொகை பதிப்புரை - ( 1887 )
-
இலக்கண விளக்கப் பதிப்புரை -
-
சூளாமணிப் பதிப்புரை ( 1889 )
-
தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் பதிப்புரை
-
தொல்காப்பியம் - பொருளதிகாரப் பதிப்புரை ( 1885 )
-
தொல்காப்பியப் பதிப்பு - தமிழ் தந்த தாமோதரம்பிள்ளையின் பரமோபகாரம் - சி.கணபதிப்பிள்ளை ( 1950 )
-
சி.வை.தா இவ்வுலகை நீத்தபொழுது அன்பர்கள் பாடிய பாடல்கள் சில - உ.வே.சா, சூரிய நாராயண சாஸ்திரி, அ.குமராசுவாமிப் புலவர்