சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கை அரசியலில் தமிழ் மொழிக்குக் கொடுக்கப்பட்ட நெருக்கடியினால் 1950 களின் முற்பகுதியில் ஈழத்தமிழர்களிடையே தமிழ்மொழி பற்றிய சிந்தனைகள் மேலோங்கியது இந்நிலையில் நமக்கு முன்னே தமிழை நினைந்து உருகி தமிழை வாழ்வித்து தாமும் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களை நினைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழைப் போற்றிப் பாடிய பன்னிரு புலவர்களின் கருத்துக்களை ஏழு கட்டுரைகளின் வாயிலாகக் கூறும் நூல்.
இந்நூலில் இடம்பெற்றுள்ள முதல் ஆறு கட்டுரைகளும் 1956 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடக்கம் 1957 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையிலான காலப்பகுதியில் தினகரன் ஞாயிறு இதழில் வெளிவந்தவை. ஏழாவது கட்டுரை 1966 இல் சிவத்தொண்டன் என்ற சஞ்சிகையில் வெளிவந்தது.
பொருளடக்கம்
-
தன்னேர் இலாத தமிழ்
-
உரிமைக்குரல்
-
கபிலரின் புலமை உள்ளத்தில் இடம் பெற்ற பாரியின் உயர் பண்புகள்
-
இலக்கியத்தில் வயல்வளம்
-
இலக்கியத்தில் பாலை நிலம்
-
திருக்குற்றாலச் செந்தமிழ்
-
மூவர் தமிழ் விருந்து