தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கலைகள் செய்வோம்
பதிப்பு ஆண்டு : 2010
பதிப்பு : முதற் பதிப்பு
ஆசிரியர் :
பொன்னம்பலம், மு
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
Telephone : 94112472362
விலை : 260.00
புத்தகப் பிரிவு : சிறுவர் கதைகள்
பக்கங்கள் : 60
ISBN : 9789550367115
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 29 cm
அளவு - அகலம் : 21 cm
புத்தக அறிமுகம் :

இதுவரை மு.பொன்னம்பலம் ஈழத்தின் நவீன கலை இலக்கியப் பரப்பில் பல்வேறு புத்தாக்கமான புதிய முயற்சிகளுக்கு களம் அமைத்துத் தந்தவர். தனது வாழ்நாள் முழுவதும் கலைகளுக்கும் தத்துவத்துக்கும் இடையில் உறவாடி சுயவிசாரணைகளை தன்னளவில் எழுச்சிக்கொள்ளச் செய்து அதற்கு வடிவம் கொடுப்பதில் மகிழ்வு கொண்டவர். 

இன்று மு.பொ பெரியவர்களுக்கு இலக்கியம் படைக்கும் முயற்சியிலிருந்து அவ்வப்போது விலகி சிறுவர்களுக்கு இலக்கியம் படைக்கும் வெளியில் மெய்மறந்து உலா வரும் சிறுவனாக ஆயகலைகள் படைக்கும் மனிதஜீவியாக வெளிப்பாடு கொள்கின்றார். இதன் அறுவடையாகவே ‘கலைகள் செய்வோம்” எனும் தொகுப்பு அமைகின்றது. 
 
கவிஞர் தானே களித்தல், கற்றல், வியத்தல் எனும் வகைமைப்பாட்டின் எல்லைகளைக் கீறி  அவற்றை  தானே அழித்து கலைகளின் முழு வடிவங்காண விளைகின்றார். தொடர்ந்து தன்னைத்தான் எழுச்சிகொள்ளச் செய்து துள்ளிக்குதித்து  தாண்டவமாடி பிரபஞ்சத்தின் வெளிகளின் ஓரங்களில் எல்லாம் நீந்தி விளையாடி மனவெழுச்சியின் பன்முகக் கூறுகளின் மோதுகைக்கு ஆட்பட்டு பின் நிதானித்து இயல்பாய் வெளிவரும் ஞானக்குழந்தைகளின் உருவாக்கத்திற்காக இந்நூலைப் படைத்துள்ளார்.
 
வாழ்க்கையின் மர்மங்களும் சுவாரசியங்களும் மாறுபட்ட புலக்காட்சிகளும் தன்னைத்தானே புரிந்துகொள்ளலும் மேலும் மேலும் வாழ்க்கையில் நம்பிக்கைக் கொண்டு வாழ்வதற்கான ஆற்றுப்படுத்தலை இன்னும் விரிவாக்கும் பண்பு எந்தவொரு படைப்புக்கும் உயிர்ப்பாகவே அமையும். இதனை உணர்ந்து படைக்கும் படைப்பாளி மனித மனங்களை, மனித உள்ளாற்றல்களை நுண்ணாய்வுக்கு உட்படுத்தி பண்படுத்தும் பெரும் பணியில் ஈடுபடுபவராகவே இருப்பர். இந்த உயரிய பணியை சிறுவர் மன உலகத்துடன் வினைபுரிந்து கடக்க முற்படும் ஒவ்வொரு தருணத்திலும் கவிஞர்கள் மறுபிறப்பாகவே அவதரிப்பர்.  மு.பொன்னம்பலமும் இதற்குச் சாட்சியாகவே இந்த ஆக்கத்தை நமக்குத் தந்துள்ளார். 
 
தமிழில் சிறார் இலக்கியம் இன்னும் பல்வேறு வளங்களை கொண்டு வந்து சேர்க்க வேண்டிய நிலையிலேயே உள்ளது. இந்த தருணத்தில் இந்நூல் வெளிவருவது இத்துறைக்கு மேலும் வளம்சேர்க்கும் என்றே நம்பலாம். 
  
 

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan