தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கதைக் கனிகள்
பதிப்பு ஆண்டு : 2011
பதிப்பு : முதற் பதிப்பு
ஆசிரியர் :
அரியநாயகம், வி
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
Telephone : 94112472362
விலை : 240.00
புத்தகப் பிரிவு : சிறுவர் கதைகள்
பக்கங்கள் : 126
ISBN : 9789550367153
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21 cm
அளவு - அகலம் : 14 cm
புத்தக அறிமுகம் :

அமரர் வி.அரியநாயகம் அவர்களின் புனைவுகள் தனித்துவமானவை. கதையுரைக்கும் நீண்ட மரபினதும் கற்பித்தல் நெடுவழியின் பதிவுகளினதும் அனுபவச் சுவடுகளைத் தாங்கியவையாக அவரது ஆக்கங்கள் முகிழ்ப்புக் கொண்டுள்ளன. கதை சொல்லலில் விளைவின் (நுககநஉவ) முக்கியத்துவத்தை முன்னெடுக்கும் ஆசிரியர் அதன் வழியாக விழுமியக் கையளிப்பை மேற்கொள்ளும் இலக்கை முன்னெடுத்துள்ளார். அந்நிலையில் அவரது ஆசிரியத்தின் செவ்வழி புலப்படு கின்றது.

கதை கேட்போரின் அறிகைத்தளம், சொல்லும் பொருளின் உட்பொதிவு, எடுத்துரைப்பு முறைமை, விளைவுகளின் சலனம் முதலிய பரிமாணங்களை உள்ளடக்கியதாகக் ஷகதைக்கனிகள் மேலெழுகின்றன. கதை நகர்த்தலின் தொடர்ச்சி கற்பித்தலின் நகர்ச்சியாகின்றது. 
 
கற்பித்தலும் கதை சொல்லலும் கதைக்கனிகளிலே ஒன்றிணைந்து சங்கமிக்கின்றன. கற்பித்தலின் பரிமாணங்களுள் ஒன்றாகிய உளவியலும் கதைகளிலே உட்புகுந்துள்ளது.  சிறப்பாக அறிகை உளவியல், மானிட உளவியல் முதலியவற் றின் அசைவுகள் கதைகளிலே விரவியுள்ளன. 
 
இங்கு கதைகளை முகாமைப்படுத்தும்|  கையாட்சியும் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ‘கதை முகாமை” என்ற எண்ணக்கரு கதை மீது செலுத்தப்படும் கட்டுப்பாட்டையும், நெறியாள்கையையும், வினைப்படும் இயக்க முன்னெடுப்புக்களையும் குறிப்பிடுகின்றது. அந்த வகையிலே கல்வி முகாமை அனுபவங்கள் கதை முகாமை யிலும் நிறைந்துள்ளமையைக் காணமுடிகின்றது. அமரர் அரியநாயகம் அவர்களின் கதைகளை வாசிக்கும் பொழுது, கடந்து சென்ற கல்விக் காட்சிகள் தொடர் சித்திரங்களாகப் புதைந்தெழுகின்றன. 
 

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan