சோவியத் அறிஞர் அலெக்சாண்டர் காந்திராவ் ஆசியவியலாளர், பண்டை நாகரிகங்களின் எழுத்துக்ளைப் படித்தறியும் முயிற்சியில் ஈடுபட்டவர். அறிவியல் செய்திகளைப் பொதுமக்களுக்குப் புரியும் வகையில் எழுதியவர். சிந்துவெளி நாகரிக முத்திரை எழுத்துக்களை தமிழ் ( திராவிடம் ) எனக் கண்டுணர்ந்த சோவியத் அறிஞர் குழுவினருள் ஒருவர். 17 நூல்களையும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் படைத்தவர்.
அவருடைய உருசிய மொழி மூலப்படைப்பின் ஆங்கிலப் பெயர்ப்பு நூலை மிகச் சிறப்பாக தமிழாக்கம் செய்து அறிஞர் பி.இராமநாதன் தந்துள்ளார்.