பொருளடக்கம்
தமிழரின் தாயகம் பற்றிய அரிய நூல் வரலாற்றறிஞர் வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர் வரைந்த ஆங்கில நூல் ( Origin and Spread of the Tamils ) இதனை அறிஞர் பி.இராமநாதன் ‘தமிழரின் தோற்றமும் பரவலும்” என்னும் தலைப்பில் மொழி பெயர்த்துள்ளார்.
1940 நவம்பரில் 29-30 தேதிகளில் வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர் ’தமிழரின் தோற்றமும் பரவலும்” பற்றி ஆற்றிய இரண்டு ஆங்கிலப் பொழிவுகளும் 1947ல் 53 பக்கங்களில் அச்சிடப்பட்டன. தமிழரின் தாயகம் தென்னாடே. இங்கிருந்தே பழந்தமிழ (திராவிட) நாகரிகம் சிந்துவெளி, சுமேரியம், எகிப்து ஆகிய பகுதிகளுக்குப் பரவியது என்பது அப்பொழிவுகளின் முடிவு. இப்பொழிவுகளுக்கான அடிக்குறிப்புக்கள் 47 பக்கங்களில் தரப்பட்டன. 1940களுக்கு முன்னர் வெளியிடப்பட்டிருந்த பல்துறை நூல்களிலிருந்து அப்பொழிவுகளின் முடிவுக்கான விரிவான ஆதாலரங்களை அக்குறிப்புக்கள் தந்தன. தீட்சிதரின் முடிவுகள் 1940-2006 கால அளவில் வேறு துறைகளில் ஏவப்பட்டுள்ள வளர்ச்சி நிலைகளின்படி எவ்வாறு மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளன என்பதை முன்னுரையில் காணலாம்.