ஆனந்த குமாரசுவாமி தோரியம் என்ற புதுக் கனிப்பொருளை 1904 ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார், பின்னாட்களில் இந்திய கலைகளுக்காற்றிய சேவையே அவருக்கு அழியாப் புகழைத் தேடிக் கொடுத்தது. இந்தியக் கலைகள் தெய்வ அம்சம் பொருந்தியவை. யோக நிலை கைவரப் பெற்ற கலைஞர்களால் படைக்கப்பட்டவை. அதனை விளக்கி இவர் பெரிதும், சிறியதுமான பல நூல்களை எழுதியுள்ளார். அவருடைய ஆங்கில எழுத்துக்கள் தமிழில் கூறுவது மிகக் கடினமான காரியம் என்று கூறுவோரும் உண்டு. இத்தகைய செயல்பாட்டைக் கொண்ட கலாயோகி ஆனந்த குமாரசுவாமி வாழ்க்கை வரலாற்றை கூறும் நூல்.
ச.அம்பிகைபாகன் எழுதிய கலாயோகி ஆனந்த குமாரசுவாமி (1978) என்ற நூலின் சுருக்கிய வடிமாக இந்த நூலைக் கொள்ளலாம்.
பொருளடக்கம்
-
கல்வியில் சாதனை
-
இலங்கையில் கனிப்பொருள் ஆராய்ச்சி
-
கலையில் ஆர்வம் அரும்புதல்
-
இலங்கை சமூக சீர்திருத்தச் சபை
-
யாழ்ப்பாணத்தில் ஆனந்தகுமாரசுவாமி
-
இந்தியாவும் இலங்கையும்
-
இந்திய விடுதலை இயக்கமும் சுதேசியமும்
-
இந்தியக் கலையின் நோக்கங்களும் செயல் முறைகளும்
-
நூல்கள் வெளியிடுதல் கலைக்காட்சிகள் நடத்தல்
-
அமெரிக்காவில் கலைப்பணியும் தத்துவ ஆராய்ச்சியும்
-
வித்தகர் புகழுடம்பு எய்துதல்.