சாமுவேல் ஸ்மையல்ஸ் எழுதிய 'செல்ஃப் ஹெல்ப்' என்ற நூல் கா.நமச்சிவாய முதலியார் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு 1930 இல் வெளிவந்துள்ளது. இது பழந்தமிழ் நடையின் ஆவணமாக இருக்கிறது. இந்நூலை வாசிப்பதின்மூலம் புதுமைத் தமிழ், நடந்து வந்த பாதையை அறிய முடியும். தமிழர்களின் நலன்கருதி அந்தக் காலத்திலேயே 'தன் முயற்சி' என்ற நன்னம்பிக்கை நூலைத் தமிழில் தந்திருக்கிறார்.