500 பக்கங்களுக்கு மேல் விரியும் இந்நூலில், எந்த ஒரு பக்கத்தைப் பிரித்தாலும், அதை வரி விடாமால் படிக்கத் தூண்டும் தொலைக்காட்சி தகவல் களஞ்சியமாக இந்நூலை உருவாக்கியுள்ளார் ஆசிரியர். உலகில் தொலைக்காட்சி எங்கு தோன்றி, எப்படி வளர்ந்தது என்ற வரலாறு முதல், இந்திய தொலைக்காட்சித்துறையும், அதன் சட்ட வரையறைகளும் உருவானது; தொலைக்காட்சி நிறுவனத்தை எப்படித் துவங்குவது ; அதனை நிர்வகிப்பது ; நிகழ்ச்சிகளை எழுதுவது ; இயக்குவது ; நகழ்ச்சிகளுக்குரிய பங்காளர்களை பாத்திரத்திற்கேற்ப தேர்வு செய்வது ; செய்தி ஆக்கம் ; தயாரிப்புச் செலவுகள் ; கேமிரா ; ஒளி அமைப்பு ; படத்தொகுப்பு ; கம்ப்யூட்டரின் பங்கு ... என்று இத்துறை தொடர்பான அனைத்து விவரங்களையும் சிறந்த புகைப்படங்களோடு, தொழில்நுட்ப ரீதியாக விவரித்துள்ளார். இத்துறையில் 15 வருட காலத்தில் பல ஆக்கங்களைத் தந்து, பல விருதுகளையும் பாரட்டுக்களையும் பெற்றுள்ள இந்நூலிசிரியர், தனது நேர்த்தியான அனுபவத்தினால் இத்துறை ஆர்வலர்களுக்கு முதன் முதலாக தமிழில் ஒரு முழுமையான வழிகாட்டி நூலை வடித்துள்ளது சிறப்பானது.
- 30.10.2007 -