தமிழில் நாட்டார் சமயம் குறித்த ஆழமான ஆய்வுகளை முன்வைத்த பேராசிரியர் தொ.பரமசிவன், கோயில்களின் பிரமாண்டாமான அமைப்புகளுக்கும் அதிகாரத்திற்கும் இடையிலான தொடர்பு குறித்து ஆய்வுகளைச் செய்த பேராசிரியர் சுந்தர்காளி இருவரும் சமயம் குறித்து உரையாடும் உரையாடலின் தொகுப்பு. மனிதர்கள் மதம் என்கிற ஒன்று இல்லாமல் வாழ முடியுமா, மதம் என்பது எப்போதும் அதிகாரத்தோடு தொடர்புடையது தானா போன்ற கேள்விகளை முன்வைத்து உரையாடல் நகர்கிறது. தெய்வ நம்பிக்கை என்பது வேறு, சமயம் என்பது வேறு என்கிறார் தொ.பரமசிவன். தனி மனிதர்களின் நம்பிக்கைகள் என்பதைத் தாண்டி மனிதுறவுகளைச் சிதிலமடையச் செய்யும் அளவு மத மோதல்கள் அதிகரித்து வரும் சூழலில், மதங்களின் வேர்கள் மற்றும் சமூக வாய்க்கையில் அதன் பங்கு குறித்து ஆரோக்கியமான உரையாடல், அவசியாமான புத்தகம்..
- - 2008.11.08 - -