தனிநாயகம் அடிகளார் மலேசியப் பல்கலைக்கழகத்தின் இந்தியவியல் துறையில் பேராசிரியராக பணியாற்றிவர், உலகத் தமிழாராய்சி மாநாடுகள் நடைபெறுவதற்குக் காரணமான முதன்மையானவர். இவர் வெளியிட்டு வந்த Tamil Culture என்ற ஆங்கிலக் காலாண்டு இதழ் 1955 இற்கும் 1963 இற்கும் இடைப்பட்ட காலத்தில் பல தமிழ் ஆய்வாளர்களை ஒன்றிணைத்து தமிழியல் ஆய்வில் ஒரு புதிய தொடக்கத்தை தந்தது. இவரின் வாழ்க்கை வரலாற்றை கீழ்வரும் தலைப்புகளில் சுருக்கமாகத் தரும் நூல்.
அ.சண்முகதாஸ் எழுதிய இலங்கைப் பேராசிரியர்களின் தமிழியற் பணிகள், அமுதன் அடிகள் எழுதிய தனிநாயகம் அடிகளார், ஆ.தேவராசன் எழுதிய தமிழ்த்திரு தனிநாயகம் அடிகளார் ஆகிய நூல்களில் இருந்து சாராம்சமாக உருவாக்கப்பட்ட நூல்.
பொருளடக்கம்:
-
வாழ்வும் வளமும்
-
தமிழ் மொழிப் போராட்டம்
-
அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள்
-
அடிகளாரின் தமிழியலாய்வு
-
அடிகளாரின் படைப்புகள்
-
அடிகளாரின் தமிழியல் ஆய்விதழியல் முயற்சிகள்
-
தமிழியல் ஆய்வுகளில் ஒரு தனி சகாப்பதம்
-
பின்னிணைப்புகள் ,
-
உசாத்துணை