இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரர் நல்லகண்ணு, சிறு பத்திரிகை வட்டாரத்தில் பிரபலமான சமூக விமர்சகர் அ.மார்க்ஸ்... இருவருக்கும் இடையேயான நீண்ட விவாதத்தின் தொகுப்பே இந்தப் புத்தகம். இந்தியா-அமெரிக்கா அணு ஒப்பந்தம், புதிய பொருளாதாரக் கொள்கை போன்ற கடந்த சில மாதங்களின் முக்கியமான அரசியல் நடப்புகள் முதல், சோவியத் ரஸ்யாவின் வீழ்ச்சி, போஸ்ட்மாடர்னிசம் வரை பேசுகிறார்கள். தமிழ்த் தேசியம் ஆபத்தானதா, பொருளாதார வளர்ச்சிக்கு கம்யூனிஸட்கள் எதிரியா போன்ற சாமானிய மனிதனின் கேள்விகளுக்கு விடை தேடும் விவாதம். தன் கருத்தே சரி என்ற விதண்டாவாதமோ, எதிராளியை மடக்க வேண்டும் என்ற பேச்சு சாதூர்யமோ இல்லாமல், சமூக அக்கறையுடன் கூடிய, நம் அரசியல்அறிவை விஸ்தரிக்கும் மோதல்!