மொழி, இலக்கிய கலைப் பண்பாடு என தமிழின் சிறப்பை உணர்த்தும் தமிழ் ஆய்வுரை நூல் "தமிழின் பெருமையும் தமிழரின் உரிமையும்". ஆசிரியர் செந்தமிழ் செல்வர் சு.ஸ்ரீ கந்தராசா ஆஸ்திரேலியா இன்பத் தமிழ் வானொலியில் வாராவாரம் பேசியதையும், பல நாட்டு அறிஞர்கள் தமிழ் குறித்த ஆய்வுகளும் 1100 ஆண்டுகளுக்கு முன் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டு வரை கன்னட மொழி தமிழாகவும், 900 ஆண்டுகளுக்கு முன் கி.பி 11 ஆம் நூற்றாண்டு வரை தெலுங்கு மொழி தமிழாகவும், 700 ஆண்டுகளுக்கு முன் 13ம் நூற்றாண்டுவரை மலையாளம் தமிழாகவும் இருந்துள்ளதையும் இலக்கிய வளமும் இலக்கண வளமும் பெற்ற தமிழ் மொழி தமிழ் கற்றோர்க்கும் கற்போருக்கும் பிலாப் பழத்தை உரித்து சுளையாகக் கொடுப்பது போல் தமிழை சுவையாகத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார். காலத்தை வென்று நிற்கும் கருத்துக்கள் இப்புத்தகம் முழுவதும் அணிவகுத்து நிற்கின்றன.
- - - அக்டோபர் 2007 - - -