மலேசித் தமிழ் இலக்கியத்தில் பெரும் பங்கு வகிக்கும் புதுக் கவிதையின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் ஆய்வு செய்து ஆறு இயல்களில் தந்துள்ளார் திருமதி இராஜம் இராஜேந்திரன். பெரிதும் முயன்று ஆய்வு செய்து தரப்பட்டுள்ள இந்நூல் புதுக்கவிதையின் தோற்றத்தையும், வளர்ச்சியையும், மலேசியத் தன்மையையும், தாக்கத்தையும் விரிவாகப் பேசுகிறது. மலேசியக் கவிதையின் பாடுபொருட்கள், உத்திகள், மொழிநடை, மண்ணின் தன்மைகள் உள்ளிட்டவற்றை அறுநூறுக்கும் மேற்பட்ட நூல்களை ஆய்வு செய்து தந்துள்ளார் ஆசிரியர். புதுக்கவிதை எழுதுவோருக்கும், எழுத
நினைப்போருக்கும் பெரிதும் பயன்படும் வகையில் ஆய்வு செய்து வகைப்படுத்தப்பட்டுள்ளது. மலேசியப் புதுக்கவிதையின் வளர்ச்சியை விளக்கும் இந்நூல் எதிர்கால சந்ததியினருக்கும் பயன்படும் வகையில்
ஆவணமாக்கப்படுட்டுள்ளது. மேலும் இந்நூல் மலேசியத் தமிழர்களின் பல நிலைப்பட்ட வாழ்வியல் சூழ்நிலையையும் அறிய உதவுகிறது.
- - - பிப்ரவரி 2008 - - -