ஒரே மூச்சில் 'நல்லம்மா' நாவலைப் படித்து முடித்துவிட்டேன். நமது மண் எழுத்து, நமக்கு வீட்டுச் சாப்பாடு போல. 'கிராமியத்தைக் கண்டறியும் அகழ்வாராச்சி' - என்ற பா.செ அவர்களின் முன்னுரையைப் (கட்டைரையை) புத்தகத்தின் கடைசியில் சேர்த்திருக்கவேண்டும். முதலிலேயே ஒரு பெரிய மேளம் வாசித்து முடித்தபிறகு, உங்கள் எழுத்து மிகச் சிறியதாகத் தோன்றுகிறது. யானைக்கு மேல் பாகன் உக்கார்ந்து வந்தாலும் எல்லாரும் யானையைத்தான் பார்ப்பார்கள். 'சொலவடைகளை கொஞ்சம் குறைத்துக்கொண்டிருக்கலாமே!' என்று சில இடங்களில் தோன்றுகிறது. நாவலின் முடிவு, ஏதோ மங்களகரமான முடிவு போலத் தோன்றினாலும் குமார சாமிக்கு கல்யாணமாகி அந்த ஊருக்கே குடித்தனம் வந்த பிறகுதான் நல்லம்மா, குமாரசாமியின் சமாச்சாரங்களே ஆரம்பமாகும் . எதார்த்தம் என்பது அதுதான். அதுகளை இந்த நாவலின் ரெண்டாம் பாகமாகத் தொடங்கினால் சுகமாக அமையும். இப்போ, பாதிச்சாப்பாட்டில் எழுந்திருக்கது போல இருக்கு.
- - - ஜனவரி-மார்ச் 2008 - - -