முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைத் துறையில் அனுபவம் பெற்ற எழுத்தாளர் கே.ஜி.மாகதேவா எழுதிய சிரிக்க, சிந்திக்க, திகைக்க என தினம் ஒரு தகவலாக ஈழநாடு பத்திரிக்கையில் எழுதிய 233 துணுக்குச் செய்திகளைத் தொகுத்து வழங்கியிருக்கும் நூல். "கதையல்ல நிஜம்" இலங்கையில் 1981-ல் பத்திரிக்கை அலுவலகம் தீக்கிரையான சம்பவமும், "துப்பாக்கி தூக்கிய ஆதீனம்" என்ற தலைப்பில் உருத்திராட்ச மணிகளை வருடிய மதுரை ஆதீனத்தின் கைகளே துப்பாக்கிக் குண்டுகளை உருட்டுவதானால்..? என்ற தகவலும், "அன்றைய பாக்-காஷ்மீர்" என்ற செய்தியில் 1990-ல் காஷ்மீரின் கொடுபிடியை குறித்து விளக்கும்போது, இன்று இந்தியா காஷ்மீர் உடன்பாடு வித்தியாசமான அணுகுமுறையை நமக்கு உணர்த்தும். இதுபோன்ற சுவாரஸ்யமான பொது அறிவுத் தகவல்களைத் திரட்டிக் தொகுத்தும், கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் 2006-ல் நூலாசிரியர் கே.ஜி.மகாதேவா எழுதிய நினைவலைகள் என்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியின் தொகுப்பும் இடம்பெற்றுள்ளது.
- - - ஜனவரி 2008 - - -