"தூக்கு மர நிழலில் நிற்கும் தன் மகனை மீட்கப்போராடும் ஒரு தாயின் உண்மைக் கதை" என நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 தமிழர்கள் குற்றம் சாட்டப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டனர். அவர்களின் விசாரணைகள் பற்றியும் சிறை வாழ்க்கை பற்றியும் அதற்காக கலைந்த உறவுகள் பற்றியும் இந்நூல் பேசுகின்றது. குற்றம் சாட்டப்பட்டு சித்திரவதை செய்ய்ப்பட்டவர்களில் ஒருவர் பேரறிவாளன். இவரின் தாயாரான அற்புதம் என்பவரை அடியாகக்கொண்டு இக்கதை எழுதப்பட்டுள்ளது. சிறையும் சித்திரவதையும் என மனிதத்தின் இன்னொரு அவலத்தை பதிவாக்கியுள்ளது இந்நூல். சிறையில் இருப்பவர்களைப் போலவே சிறைக்கு வெளியில் அல்லுறும் மனித நேயங்களின் உயிர் வதையின் ஒரு பகுதியையும் வெளிக்கொணர்ந்திருக்கிறது. மகனின் விடுதலைக்காக போராடும் தாய் எதிர்நோக்கிய இந்திய அரசியல் , சமுதாய அவலங்களை பதிந்துள்ளது. மனு நீதியென்பதும் இந்திய அரசியலுக்குள் அடக்கமே என இன்னொரு முறை கூறிச் சொல்லப்பட்டுள்ளது.
- - - 2005 மே - - -