ஈழப் பெண்கவிஞர்களின் கவிதைகளை ஒரு சேரப் படித்து ப் பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது இந்தத் தொகுப்பு. சித்ரலேகா மௌனகுரு, வ.கீதா, அ.மங்கையின் கட்டுரைகள் ஈழப் பெண் கவிஞர்களின் கவிதைப் பின்புலத்தை விளங்கிக் கொள்ள உதவும். இந்தத் தொகுப்பிலிருந்து
ஆளியாளின் ஒரு கவிதை....
அடையாளம்
பிறந்த வீட்டில்
கறுப்பி
அண்டை நாட்டில்
சிலோன் அகதிப் பொண்ணு
இலங்கை மத்தியில்
"தெமள"
வடக்கில்
கிழக்கச்சி
மீன்பாடும் கிழக்கில்
நானோர் மலைக்காரி
மலையில்
மூதூர்க்காரியாக்கும்
ஆதிக் குடிகளிடம்
திருடப்பட்ட தீவாயிருக்கும்
என் புகுந்த நாட்டில்
அப்பாடா!
பழையபடி நான் கறுப்பியானேன்!
- - - 06.06.2007 - - - -