நூற்றாண்டுகள் கடந்த பின்பும் தன் கலைத்துவம் மிகுந்த எழுத்தால் இந்த உலகை கவர்ந்திழுத்துக் கொண்டிருக்கும் மிகப்பெரும் பிரெஞ்சு இலக்கிய மேதை ஜீன் பால் சார்த்தர். ஐம்பத்தொன்பது வயதில் தனது வாழ்வின் முதல் பத்தாண்டுகளைப் பற்றி த வேர்ட்ஸ் என்ற பெயரில் எழுதிய சுயசரிதத்தை தமிழில் பரசுராம் (வஸந் செந்தில்) மொழிபெயர்த்திருக்கிறார். ஏழு அல்லது ஒன்பது வயதில் சார்த்தர் என்னவாக இருந்தார் என்பதைப் புரிந்துகொள்ள இந்நூல் உதவுகிறது. இம்மியளவும் பாசாங்கின் நிழல் படியாத நேர் எழுத்துக்களால் நிரம்பிய பக்கங்கள் கொண்டது சார்த்தரின் சொற்கள் என்ற நூலின் பின்னுரை வார்த்தைகள் சொல்கின்றன. ரொம்பவும் சிக்கலான மற்றும் இறுக்கமான மொழி நடையில் அமைந்த நூலை எளிய வாசகனும் புரிந்துகொள்ளும் மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார் பரசுராம். சில இடங்களில் பிரெஞ்சு மற்றும் ஆங்கில வார்த்தைகள் வருகின்றன, அதற்கு இணையான தமிழ் வார்த்தைகளைக் கண்டறிந்து எழுதியிருக்கலாம்.
- - - 25 June - 1 July 2007 - - -