தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு(2007)
ஆசிரியர் :
கமலக்கண்ணன், மு
பதிப்பகம் : தோழமை வெளியீடு
Telephone : 919444302967
விலை : 100
புத்தகப் பிரிவு : திரைக்கல்வி
பக்கங்கள் : 160
புத்தக அறிமுகம் :
தனிப்பட்ட முறையில் ஹிட்ச்காக் என் மனம் கவர்ந்த இயக்குனரல்ல... பொய்யில்லாத கண்ணீரை என் கண்களில் வரவழைத்த விக்டோரியா டிசிகா.. ஒவ்வொரு பிரேமிலும் என்னை வியக்க வைத்த அகிரா குரோசோவா.. இவர்கள்தாம் என் மனம் கவர்ந்த இயக்குநர்கள்... கமலக்கண்ணனின் இந்த நூல் முன்னரே வெளியிடப்பட்டிருந்தால், ஹிட்ச்காக் பற்றிய என் எண்ணங்கள் மாற்றப்பட்டிருக்கும். - - - பா.ரவிக்குமார் - - -
ஊடக மதிப்புரைகள்
1
மதிப்புரை வெளியான நாள் : update
மதிப்புரை வழங்கிய இதழ் : நிழல்
மதிப்புரை வழங்கியவர் பெயர் : ஆசிரியர் குழு

ஹிட்சாக்கின் பரம ரசிகரான கலைச்செழியன் தமிழில் ஒரு பெரிய நூலை வெளியிட்டிருக்கிறார். அது கிடைக்காதவர்களுக்கும், அந்நூலிற்கான கீபுக்காக இதனைக்கொள்ளலாம். எளிமையான முறையிலும், இனிமையாகவும் இவரது நடை அமைந்துள்ளது. நூல் ஆழமாக இல்லையே என பாரத்தபோதுதான் தெரிந்தது "என்னைப் போலவே எல்லா சாமான்ய சினிமா ரசிகர்களுக்கும்" என்று சமர்ப்பணம் செய்திருப்பது. மர்மங்களை விற்றவர், ஹிட்சாக்கின் ஆன்மா, மௌனமே பாஷையாய், மௌனம் பேசியது, ஹாலிவுட், இறுதிப் படங்கள், கடைசி நாள், ஹிட்சாக்குடன் இரண்டு உரையாடல்கள், திரைக்கதை என்னும் கலை முதலிய தலைப்பில் ஹிட்சாக் பற்றிய ஒரு நல்ல அறிமுக நூலை தந்துள்ளார் கமலக் கண்ணன். - - - அக் - நவ 2007 - - -

1

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan