தமிழ் மொழியின் மேன்மையையும், தொன்மையையும் எதிர்கால நிலையை நினைத்தும் எழுதப்பட்ட 22 கட்டுரைகள் அடங்கிய நூல். தமிழின் கால வரலாற்றினைச் சங்கப் பாடல்கள் கொண்டு நிருணயப்படுத்தியுள்ளார் ஆசிரியர். அதற்கான சான்றுகள் பலவற்றைப் பல நூல்களில் இருந்து எடுத்தாண்டுள்ளார். மேல்நாட்டோர் தமிழ் மொழி பற்றிக் கூறிய கருத்துக்களுடன், பிற மொழியினரால் தமிழ் எவ்வாறு சீரழிக்கப்பட்டது என்பதனையும் ஆசிரியர் பதிவு செய்துள்ளரர். புறநானூற்றுப் பாடல்களுடன் பல பழம் பாடல்களைக் காட்டி அறிவியல் கருத்துக்களை எளிய முறையில் தமிழர்கள் சொல்லியுள்ளார்கள் என்பதை அறிவியல் என்ற கட்டுரையில் விளக்கியுள்ளார். மேலும் தமிழ் வளர்த்த 1535 புலவர்களின் பட்டியலை அகர வரிசையில் தந்திருப்பது ஆய்வு மாணவர்களுக்குப் பெரிதும் பயன்படும். தமிழின் இன்றைய நிலையையும், இருக்கவேண்டிய நிலையையும் மனத்துயர் மேம்பட ஆசிரயர் எழுதியிருப்பது நன்கு வெளிப்படுகிறது. ஆசிரியர் மனம் மகிழும் நிலை விரைவில் வர நூலைப் பட்இப்போரும் துணை புரிய வேண்டும்.
- - - 2007 நவம்பர் - - -