இந்நூல் ஈரோடு தமிழன்பன் படைப்புகளைப் பொது நிலையில் ஆய்ந்தும் அவர் படைப்புகள் சிலவற்றை சிறப்பு நிலையில் ஆய்ந்தும் 8 அறிஞர்கள் எழுதிய 9 கட்டுரைகளின் தொகுப்பு. "புதுக்கவிதை ஒரு மகா கவியைத் தோற்றுவிக்க முடியுமானால் அது ஈரோடு தமிழன்பனாகத்தான் இருக்க முடியும்" எனத் துணியும் ச.செந்தில்நாதன், தமிழன்பனின் படைப்புலகைப் படம்பிடித்துக் காட்டும் கே.எஸ், தமிழன்பனை மையப்படுத்திப் புதிய ஆய்வுக் களங்களை இனங்காட்டும் பா.இரவிக்குமார், வாசிப்புக் கோட்பாட்டை வணக்கம் வள்ளுவ என்னும் படைப்போடு பொருத்தி நோக்கும் செ.வை.ச, என விரியும் அறிஞர்கள்தம் ஆழ்ந்த ஆய்வுப் பார்வைகளின் வெளிப்பாடுகளாக இந்நூலில் உள்ள கட்டுரைகளின் அணிவகுப்பு அமைந்துள்ளது.
- - - ஏப்பிரல் 2007 - - -