தினமும் தவறாமல் எனக்கு ஒரு கவிதைத் தொகுப்பு வரும்போது, மிக மிக அரிதாகத்தான் "உள்ளங்கையில் உலகம்" போன்ற அறிவியல் புத்தகங்கள் வருகின்றன. இதன் ஆசிரியர் ஆதனூர் சோழன், இதைத் தனது இரண்டாவது நூல் என்கிறார். முதல் நூல் கவிதை. இப்போது அறிவியல் கட்டுரைகள் 'கவிதை கற்பனை அறிவியல் நிஜம்! ஆனாலும் கற்பனைகள்தான் பிற்பாடு நிஜமாகின்றன' என்று அவர் சொல்வதில் எனக்கு உடனைபாடே! சிறப்பாக, சுருக்கமாக எழுதப்பட்ட கட்டுரைகள்.
சூரிய மண்டலத்தைத் தாண்டப்போகும் வாயேஜர் பற்றிய குறிப்புகள் சுவையாகத் தொகுக்கப்பட்டுள்ளன. பூமியைக் கவ்விய காந்தப் புயல், மீன் இனங்களின் கணக்கெடுப்பு, ஒளியின் வேகம்குறைகிறது போன்ற பல்துறை அறிவியல் செய்திகளைத் தொகுத்து, தெளிவான உரைநடையில் எழுதியிருக்கும் ஆதனூர் சோழனிடம் ஒரு வேண்டுகோள்.... இம்மாதிரியான புத்தகங்களை அதிகம் எழுதவும்! கவிதை எழுத மேட்டுவளையைப் பார்த்துக்கொண்டு ஆயிரம் பேர் இருக்கிறார்கள்.
- - - 05.09.2004 - - -