தமிழகத்தின் வடவெல்லைப் பகுதியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர். தமிழார்வமுள்ள சிற்றூர் மக்களுக்குத் தமிழ் கற்பித்து அவர்களைப் புலவர்களாக்கிய பெருமகன். தமிழிற்காக தன்னையே ஈந்த தகைமையாளர். இன்றைய இளைஞர்களும் இவர்தம் அருமை பெருமையுணர்ந்து தமிழுக்காகத் தங்களையே ஈகம் செய்ய முன்வர வேண்டும் என்ற வேணவாவுடன் தமிழ் மாமுனிவர் மங்கலங்கிழாரின் பன்முக ஆற்றல்களை 57 தமிழறிஞர்களின் கட்டுரைகளின் வழி ஆசிரியர் இந்நூலில் விளக்கியுள்ளார். தமிழ் வளர்த்த சான்றோர்களை மறவாது போற்றி ஒழுக வேண்டும் என்னும் தாக்கத்தை இந்நூல் நமக்கு ஏற்படுத்துகிறது.
- - - 11.06.2007 - - -