முனைவர் அரசேந்திரனின் மொழி ஆய்வுப் பணியின் தொடர்ச்சியாக இந்நூல் வெளிவந்துள்ளது. இந்நூலில் மொத்தம் 21 கட்டுரைகள் உள்ளன.
அவற்றுள் முதல் 15 கட்டுரைகள் முற்று முழுதாகத் தமிழ்-தமிழரின் உலக முதன்மையை நிலைநிறுத்தும் செய்திகளை உள்ளடக்கி உள்ளன. பிந்தைய ஆறும், இலக்கணம், சமயம், தமிழ் வழிபாடு, நெஞ்சம் நிறைந்த பெருமக்கள் பற்றிய நினைவலைகள் எனப் பல்வேறு பொருள்களைப் பற்றிப் பேசுகின்றன.
கப்பு என்னும் அடிச்சொல்லில் இருந்து கப்பல் என்னும் சொல்லும், யானையைக் குறிக்கும் நால்வாய் என்னும் சொல்லிலிருந்து நாவாய் என்னும் சொல்லும்வெளிப்பட்ட விதத்தை நூல் நுட்பமாக விளக்குகிறது.
மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், ருமேனிய நாட்டு மொழியறிஞர் உலகவாரி(கஹட்ர்ஸ்ஹழ்ஹ்) முதலான அறிஞர்கள் பலரின் ஆய்வு முடிவுகளை மறுஆய்வுக்குள்ளாக்கித் தன் முடிவை நூலாசிரியர் நிறுவு கின்றார்.
கோயில்களில் செந்தமிழ்-சமற்கிருதம் என்னும் தலைப்பில் தினமணியில் வெளியான இருகட்டுரைகளுக்கு, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கேட்டுக் கொண்டபடி ஒரு மறுப்புக் கட்டுரை எழுதி தினமணிக்கு அனுப்பியதாகவும், அதனை அவர்கள் வெளியிடவில்லை என்றும் கூறும் ஆசிரியர், அக்கட்டுரையை முழுமையாக இந்நூலில் வெளியிட்டுள்ளார்.
கடினமான ஆய்வெனினும், எளிமையான நடை இந்நூலின் சிறப்பு
- - - சூன் 1, 2005 - - -