வாழ்க்கையின் மதிப்பீடு வாழ்ந்த காலம் அல்ல; செய்த செயல் என்பதை வாழ்ந்தவர்களின் வாழ் காலத்தோடு நிலைநாட்டுவது வாழ்வாரைத் தட்டி எழுப்புவதற்கு தூண்டுதல் ஆகும். அந்த வகையில் பதினொரு தமிழ்நாட்டு எழுத்தாளர்கள், எட்டு ஈழத்தமிழ் எழுத்தாளர்களின் நேர்காணல்களைப் பொது அறிமுகமாகவே கொள்ளவேண்டும். பலரும் பயன்பெற வேண்டுமெனும் வேட்கையோடு ''வேர்முகங்கள்'' என்னும் தலைப்போடு முகம் காட்டி உள்ளது.
புதுமையான மொழி நடையோடு தொகுப்பாளர் ஐங்கரநேசன் சொற்களைக் கையாண்டுள்ள விதம் அருமை.
சாளரம் நல்லதோர் தொகுப்பை வழங்கியுள்ளது. நல்ல ஓட்டம் - சுவைமிகு செய்திகள், பல நூல்களைப் படித்த பயன் இந்நூலால் பெற முடியும். கடினம் இல்லாமல் எளிய நடையில் எழுத இயலும் என்பதை மெய்ப்பிக்கும் எழுத்துக்கள்.
- - - செப்டம்பர் 2008 - - - -