தமிழ் உலகில் வெற்றுப் புனைவுகளே இலக்கிய மாதப் வீறு நடைபோடுகின்றன. புனைவுகள் படைப்பாளியின் பிரதியாக மட்டும் நின்று விடுகிறது. தமிழ்ப்புனைவுகள் களத்தில் யதார்த்தவாதப் படைப்புகள் அருகி வரும் இந்நாளில் "சூதாட்டம் ஆடும் காலம்" படிக்க நிறைவு ஏற்படுகிறது. மலேசியத் தமிழ் நாவல் ஆன "சூதாட்டம் ஆடும் காலம்" புதிய பரிமாணங்களில் இயங்குகிறது. கதிரேசன் இலண்டன், அமெரிக்காவென பயின்று, மலேசிய பினாங்கில் தொடர்புத்துறைக் கொள்கையில் பேராசிரியராக பணியாற்றுகிறான். அவன் துறைசார்ந்த பல கருத்துக்கள் நாவலில் விரவிக் கிடக்கின்றன. அவ்வகையில் தமிழ்ப்புனைவு உலகில் புதிய நாற்றாகவே கருதலாம்.
பத்திரிகைத்துறை ஆளும் வர்க்கத்தின் கருவியாக இருக்கிறது என்று நீங்கள் சொல்லுகிறீர்கள், ஆனால் ஒரு சட்டபூர்வமான அரசாங்கத்தின் செய்லபாடுகளைக் குலைக்கும் கருவியாகவும் பத்திரிகைத்துறை எதிர்ப்பாளர்களால் கருவியாக்கப்ப்டுகிறது. அவர்கள் நாட்டில் (மலேசியா) அரசாங்கம் ஒரு அடக்குமுறை அரசாங்கமாக இருப்பதை நான் காண்கிறேன். தென்கிழக்கு ஆசியா முழுவதும் இதுவே நிலமை. கீழை நாடுகளில் இந்தியாவும் பிலிப்பைன்சும் பத்திரிகைகளுக்கு அதிக சுதந்திரம் கொடுத்துத்தான் வைத்திருக்கின்றன. ஆனால் அந்த நாடுகளில் ஊழல் ஒழியவில்லை.
தகவல் தொடர்புத்துறை ஊடகம் பற்றி நிறையவே பேசப்படுகிறது. தமிழுலகம் அறியவேண்டிய செய்திகளை அறிவுபூர்வமாக சிந்திக்கிறார். அனாதையாக விடப்பட்ட கதிர் என்ற சிறுவன் இன்று பேராசிரியராக பணியாற்றி புகழ் பெற்ற மனிதனாக வலம் வருகிறான். இதற்குப் பின்னே ஆசிரியத் தம்பதிகளின் பிரிவு, காவல்துறையின் பரிவு களம் அமைத்துத் தருகின்றன. வாழ்க்கையின் இயக்கத்திற்கு காரண காரியங்கள் உண்டா என்ற கேள்வி கதிரை தத்துவார்த்த தேடலில் கொண்டு சேர்க்கிறது. மனிதர்களை வைத்து இவர்கள் இப்போதிருக்கும் நிலைகளில் எது இருத்தியிருக்கிறது. ஏன் ஒருவருக்கு தன்னை மெழுகு வர்த்தியாக்கிக் கொள்ளும் உள்ளம் வாய்க்கிறது? ஏன் சிலர் தங்களை நினைத்து சுய நலமிகளாக இருக்கிறார்கள். விடை பொருளாதாரத்தில், அரசியல் அமைப்பில், உடலில், மனதில், அல்லது இறைவன் என்ற பெரும் மர்மத்தில் என ஆவலாதிப்படும் கதிர் எதிலும் முழுமையான விடையைக்காண்பதில்லை. இளைஞர்கள் தன் முனைப்பால் மட்டுமே உயர முடிகிறது. உறுதுணையாக சமூக அமைப்பு இருக்கும். வேற்றிடத்தில் வாழும் சூழலில் வாழும் நிலையில் சமூகம் அளிக்கும் பாதுகாப்பும், உறவு நெருக்கமும்சாத்தியமாகக்கூடும்போலும். எங்கும் துறை சார்ந்த உறவுகள் பொறாமையும், அச்சுறுத்தலும் நிறைந்ததாகவே இருந்தாலும் வெற்றியாக்கும் முனைப்பு கதிரிடம் இருக்கிறது. அவனது மனம் துவண்டுபோய் பற்றற்றுப் போக சொந்த உறவுகள்தான் காரணமாகிறது. இளைஞர்களின் வாழ்வு உயர, அவர்களைக் கீழே தள்ள த் துடிப்பது சொந்த உறவுகள்தான். இதுவும் வாழ்க்கைகளை வைத்து ஆடும் சூதாட்டம் அப்படித்தான் இருக்க வேண்டும். எந்த வரிசையில் சீட்டுக்கள் விழும் என்பதற்கு காரணம் ஒன்றுமில்லை. எல்லாம் தற்செயல்தான். வாழ்க்கை பற்றிய தீவிரமான தேடல் கதிர், பாரதி பாத்திரங்கள் மேலும் படிமமாக்கியுள்ளார். ஆயினும் சிசுக்கொலை பற்றிய கரு, நாட்ஸாம்சனின் நிலவளம் நாவலை எனக்கு நனைவூட்டுகிறது. நிறைவு தரும் படைப்பு.
- - - அக்டோபர் - டிசம்பர் 2006 - - -