தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தமிழீழம் - நான் கண்டதும் என்னைக் கண்டதும்
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு (2006)
ஆசிரியர் :
புகழேந்தி, ஓவியர்oviarpugal@yahoo.com
பதிப்பகம் : தோழமை வெளியீடு
Telephone : 919444302967
விலை : 125
புத்தகப் பிரிவு : பயணக்கட்டுரை
பக்கங்கள் : 352
புத்தக அறிமுகம் :
தமிழீழத்தில் தனது ஓவியங்களை மக்களின் காட்சிக்கு வைத்தும் அவர்களின் மன உணர்வுகளை நேரில் தெரிந்துகொண்டும் குருதியால் சிவந்த அந்த மண்ணில் பயணம் செய்தும் அவர் கண்டறிந்த உண்மைகளை நூலாக வடித்துள்ளார். இந்நூல் வெறும் பயண நூல் அல்ல, தமிழீழ மக்களின் உணர்வுகளோடு கலந்து எழுதப்பட்ட நூலாகும். இன்றைய தமிழீழத்தின் நடப்புகளை முழுமையாக அறிந்து கொள்ள இந்த நூல் உதவும். தமிழீழத்திற்கு சென்று உண்மைகளை அறிய வேண்டும் என்று துடித்துக் கொண்டிருப்பவர்கள் இந்நூலினைப் படிப்பார்களானால் நிச்சயமாக மனநிறைவு அடைவார்கள்
ஊடக மதிப்புரைகள்
1 2 3
மதிப்புரை வெளியான நாள் : update
மதிப்புரை வழங்கிய இதழ் : தினத்தந்தி
மதிப்புரை வழங்கியவர் பெயர் : ஆசிரியர் குழு

பிரபல ஓவியர் புகழேந்தி, ஒவியக் கண்காட்சி நடத்த இலங்கை சென்றிருந்தார். அப்போது, இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் விடுதலைப் புலிகள் வசமுள்ள பகுதிகளிலும் சுற்றுப் பயணம் செய்தார். இலங்கையில் அவர் கண்டவற்றைப் பற்றியும், இலங்கைத் தமிழர் பிரச்சினையின் பின்னணி பற்றியும் தெளிவாக எழுதியுள்ளார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகின்ற தமிழீழ பிரச்சனை பற்றி அறிந்து கொள்ள இது ஒரு நல்ல நூல். - - - 23.08.2006 - - -

1 2 3

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan