பாவேந்தரின் பாடல்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு எனக் கொள்ளலாம். பதினொரு தலைப்புக்களில் பாவேந்தரின் பாக்கள் சிறப்பும், கவிஞரின் எண்ணமும் புலப்படுகிறது. "
"பாரதிதாசனும் வள்ளித்தோளும்" கட்டுரையில் இவருடைய இலக்கியத்தின் ஒப்புமை காட்டப் பெறுகிறது. இந்தி எதிர்ப்பிற்காக படைக்கப்பட்ட சமூக நாடகமான நல்லமுத்து கதையில் பாவேந்தரின் சிந்தனைகள் எப்படி எல்லாம் இருந்தன என்பதை ஆசிரியர் காட்டுகின்றார்
"இந்தியை எதிர்த்திட வாரீர்;-நம்
இன்பத் தமிழ்தனைக் காத்திட வாரீர்"
என்று அறைகூவல் விடுக்கும் கவிஞர், அடுத்து
"ஆங்கிலத்தை கற்கையிலும்
அயல் மொழியைக் கற்கையிலும்
தீங்கனியைச் செந்தமிழைத்
தென்னாட்டின் பொன்னோட்டை
உயிராய் கொள்வீர்"
என்று சொல்லும்போது, ஏதோ சற்று முரண்பாடு தலைதூக்குவதாய் த் தோன்றினாலும் அதற்கு இந்நூலாசிரியர் தந்துள்ள விளக்கும் அதைப் போக்குகிறது. ஆயினும் இந்தக் கட்டுரையைப் படித்து முடித்தபோது டெல்லியில் கோலோச்சும் இன்றைய "தமிழ்ன் முகம்" மனக்கண்ணில் தெரிவதை தவிர்க்க இயலவில்லை.
- - - ஜூன் 2006 - - -