தமிழக அரசியலை நன்கு அலசி ஆய்வு செய்துள்ளார் ஆசிரியர். நல்ல வரலாற்று நூல். அரசியல்வாதிகள் மட்டுமல்ல, ஆண்ட கட்சிகளின் வரலாற்றை அறிந்து கொள்ள இந்நூல் பயன்படும், ஆனால் நல்ல ஆற்றலுடன் எழுதிய கவிஞர் ஏன் திராவிடக் கட்சிகளை மட்டும் தாக்குகிறார்? தந்தை பெரியார், தலைவர் ஆதித்தானார் ஆகியோரின் நற்செயலைப் பாராட்டிய ஆசிரியர் கடைசி 190, 191 ஆம் பக்கங்களில் தீர்வு கூறியுள்ளார். ஆனால் தமிழ்நாடு இந்திய ஆழுமைக்கு உட்பட்டதுதானே!
தமிழகத்தைச் சுரண்டிப் பிழைக்கும் வடவரையும், பிறமொழி இனத்தாரையும் விரட்டிப் போர்க்கொடி தூக்க எந்தத் தலைவர்கள் வித்திட்டனர்? தமிழகம் ஓர் ஈழமாக ஆகவேண்டும் என்று எந்தப் பிரபாகரனை நாம் போற்றும் தலைவர்கள் உருவாக்கினர் என்பதை கவிஞர் மறந்துவிட்டார்.
- - - ஜூலை 2006 - - -