தியானத்தின் அவசியத்தையும் அதை முறையாகச் செய்வது எப்படி என்பதையும் எளிமையான தமிழில் சின்னச் சின்ன கட்டுரைகளாக சீனி. குலசேகரன் தந்துள்ளார். தியானம் செய்யத் துவங்கும் முன் நம்மை எப்படித் தயார் செய்து கொள்ள வேண்டும் என்பதை முதல் கட்டுரையில் விளக்குகிறார் ஆசிரியர். அடிப்படையான ஆசனங்களையும் அதைச் செய்யும் முறைகளையும், பலன்களையும் படங்கள் மூலம் ஆசிரியர் விளக்கியுள்ளார்.
இருபத்தியிரண்டு கட்டுரைகளைக் கொண்ட இந்நூல் ஆசிரியர் இல்லாமலே தியானம் செய்யும் முறையைக் கற்றுத் தருகிறது. தியானத்திற்கு மிக முக்கியம் மெளனமும், மூச்சுப் பயிற்சியும் என்பதை பல இடங்களில் ஆசிரியர் வலியுறுத்தியுள்ளார். நம்முள் இருக்கும் திறன்களை வெளிக்கொண்டு வரும் மாபெரும் சக்தி தியானத்திற்கு உண்டு என்பதை இந்நூல் வலியுறுத்துகிறது. தியானம் கற்க எளிமையான வழிகளைச் சொல்லும் நூல்.
- - - மார்ச் 2006 - - -