எதைச் சொல்கிறோமோ அதைத் தெளிவாகச் சொல்ல வேண்டும். அதை நேரத்தில் சுருக்கமாகவும் சொல்ல வேண்டும் என்பதை முற்றிலும் உணர்ந்து இந்நூலைப் படைத்துள்ளார் ஆசிரியர்.
எல்லோரும் விரும்பிப் படிக்கும் குட்டிக் கதைகள் மூலமாகப் பல நல்ல அறிவுரைகளை, சான்றோர்களின் அனுபவங்களைச் சொல்லியுள்ளார். இன்றைய இளைய சமுதாயம் எல்லாவற்றையும் கற்க ஆசைப்படுகிறது. அதே நேரத்தில் நேரம் ஒதுக்கிப் படிக்க முடியவில்லை. இதை உணர்ந்து முக்கால் பக்கத்தில் தெளிவான சிந்தனைகளைத் தந்து விடுகிறார் குடந்தை கீதப்பிரியன். படித்து முடிப்பதற்குள் சொல்ல வந்த செய்தியும் கதையும் மனதில் ஒட்டிக் கொண்டு வருகின்றன. நாடு தேடும் கதைககள் நாட்டில் பலரும் படிக்கலாம். பரிசாகக் கொடுக்கலாம்.
- - - மார்ச் 2006 - - -