தமிழ் செம்மொழியாக வேண்டும் எனப் பாடுபட்ட பலறிஞர்களின் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட போதிலும் அரசின் அறிவிப்பில் பல குறைகள் காணப்படுவதைப் பல கட்டுரைக்ள சுட்டிக் காட்டுகின்றன.
செம்மொழியாக முழுத் தகுதியும் கொண்டது தமிழ் என்பதற்குப் பல சான்றுகளை அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். மாநாட்டிற்காக தில்லி சென்று அகால மரணம் அடைந்த பேராசிரியர் சாலினி இளந்திரையன் பற்றிய கட்டுரை ஒன்றும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. பரிதிமாற் கலைஞர், கலைஞர் கருணாநிதி, மணவை முஸ்தபா, புலவர் அறிவுடை நம்பி உள்ளிட்ட பல அறிஞர்களின் கட்டுரைகள் இத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
வரலாற்றில் பதிவு செய்ய வேண்டிய நூல்.
--- நவம்பர் 2005 ---