"சமூகத்திற்கு சங்கடம் நேர்கின்றபோது கங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்குகிறது கவிஞனின் பேனா" என்னும் சமூகப்பார்வையுடன் கவிஞர் விவேகா தந்திருக்கும் "உயரங்களின் வேர்" கவிதைப் பகுதியைச் சேர்ந்தது.இவரது கவிதையில் அழகியலுடன் சொற்செறிவும் விளங்குகிறது.வார்த்தை விளையாட்டுக்களையும் செய்திருக்கிறார்.அங்கசுவையுடன் மிளிரும் கவிதைகளும் உண்டு.தன்னுடைய காலகட்டத்தைப் பதிவு செய்திருக்கும் சமூகப்பார்வையுடனான கவிதையும் மிளிர்கிறது.சில கவிதைகளில் கிராமத்து மண்வாசனை மனதைத் தேய்த்துவிடுகிறது.எச்சரிக்கை உணர்வுகளையும் சில கவிதைகள் விதைத்துச் செல்கிறது. உவமைகளில் புதிய உத்தியை கையாளத் துடிக்கும் விவேகாவின் "உயரங்களின் வேர்" நல்ல கட்டமைப்புடனும் அழகான அட்டைப் படத்துடனும் அமைந்திருப்பது சிறப்பு.
- - - ஜூன் 2006 - - -