இந்தியாவில் பெண்களுக்கு வேத காலத்தில் இருந்தே முக்கிய இடம் உண்டு. பெண்களை உயர்த்திப்பேசியும் அவர்கள் கருத்துக்கைப் போற்றியும் வந்துள்ளோம்.
முன்னுதாரணமாகத் திகழ்ந்த பெண்மணிகளின் வரலாற்றை நான்கு பகுதிகளாக வெளியிட்ட ஸ்ரீ இராம கிருஷ்ணமடம் ஐந்தாவது பகுதியையும் வெளியிட்டுள்ளது.
இத்தொகுதியில் சமீப காலத்தில் வாழ்ந்த மீராபாய், முக்தாபாய் ராணி ரசமணி, சகோதரி நிவேதிதை, அன்னை ஸ்ரீ சாரதா தேவி போன்றோரின் சுருக்க வரலாறு இடம் பெற்றுள்ளது.
மீராபாய் கண்ணன் மீதுகொண்ட பக்தியால் உலகம் முழுவதும் அறியப்பட்டவர். முக்தாபாய் (ஞானதேவரின் தங்கை) பதினெட்டு வயதில் மின்னல் தாக்கி இறந்தவர், ஆயினும் அவரின் பாடல்க்ள மராட்டிய மண்ணில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியவை. ராணி ரசமணி ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் கல்கத்தா வர காரணமாக இருந்தவர். சகோதரி அன்நிய தேசத்தில் பிறந்தபோதும் இந்தியாவை தாய்நாடாகேற்றுக்கொண்வர். ஸ்ரீசாரதா தேவி தாயாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்.
இத்தகைய சிறப்பு மிக்க பெண்மணிகளின் வரலாறு, பெண்களின் முன்னேற்றத்திற்கும், ஆண்களிடம் ஒழுக்கமுண்டாக்கவும் காரணமாக அமையும். படித்துப் பயன் பெறலாம்.
--- ஆகஸ்ட் 2005 ---