தமிழ் சினிமாவில் நவீனத்துவத்தைக் கொண்டு வந்த இயக்குனர் மகேந்திரனின் படைப்புகளைப் பற்றி அவரே எழுதிய கட்டுரைகள். சில கட்டுரைகள் பிரபல வார இதழ்களில் வெளிவந்தவை.
நான் திட்டமிட்டு இங்கே வரவில்லை என்றாலும் கூட எனக்கும் கனவு இருந்தது. அது சினிமா குறித்த கனவு. ஒரு சினிமா எப்படி இருக்க வேண்டும் என்கிற கனவு. இந்த சினிமா எனக்கானதில்லை என் சமூகத்திற்கானதில்லை என்று அன்றைய சினிமாக்கள் எனது அதிருப்தியில் இருந்து உருவானதொரு கனவு. எனது திரைப்படங்கள் அதிலிருந்துதான் உருவாகின. இன்றைக்கு சினிமாவைத் தேடி வருகிற இளைஞர்களின் கனவு அப்படிப்பட்ட கனவா என்கிற கேள்வியை எனக்குள் எழுப்பிப் பார்த்துக்கொள்கிறேன். தமிழ்த்திரை உலகில் கதை வசனம் எழுதியவன் அல்லது இயக்குநராய் இயங்குகிறவன் என்று எந்த ஒரு ஸ்தானத்திலும் இருப்பவன் மாதிரி இல்லாமல் நல்லசினிமாவை நேசிக்கும் ஒரு ரசிகன் என்ற முறையில் தமிழ் சினிமாவுக்கும் எனக்கும் எப்படித்தொடர்பு உண்டானது. திரை உலகில் எனக்கு கிடைத்த அனுபவங்கள். நல்ல சினிமா குறித்து எனது அபிப்பிராயங்கள் என்னென்ன என்பதை எல்லாம் இங்கே எழுதி இருக்கிறேன்.
- - - மார்ச் 2005 - - -