1.
பரிசுப் போட்டியில் பங்கு பெறுவோர் விண்ணப்பப்படிவத்தினை விடுபாடின்றி முழுமையாக நிறைவு
செய்து அனுப்புதல் வேண்டும். முழுமையாக நிறைவு செய்யப்படாத விண்ணப்பம் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
|
|
2.
ஒவ்வொரு நூலுக்கும் தனித்தனியாக விண்ணப்பம் அனுப்புதல் வேண்டும்.
|
|
3.
போட்டிக்கு அனுபப்பெறும் நூல் ஒவ்வொன்றிலும் 5 படிகள் அனுப்புதல் வேண்டும்.
|
|
4. பின்வரும்
வகைப்பாடுகளில் போட்டிக்கு நூல்கள் பெறப்படும்.
|
1. மரபுக்கவிதை
|
2. புதுக்கவிதை
|
3. புதினம்
|
4. சிறுகதை
|
5. நாடகம் (உரைநடை, கவிதை)
|
6. சிறுவர் இலக்கியம்
|
7. திறனாய்வு
|
8. மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி,
இலக்கணம்
|
9. பிறமொழிகளில் இருந்து தமிழாக்கம்செய்யப்படும்
நூல்கள்.
|
10. நுண்கலைகள் (இசை, ஓவியம், நடனம், சிற்பம்)
|
11. அகராதி, கலைக்களஞ்சியம், கலைச்சொல்லாக்கம்,
ஆட்சித் தமிழ்
|
12. பயண இலக்கியம்
|
13. வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு
|
14. நாட்டுவரலாறு, கல்வெட்டு, தொல்லியல்,
கடலியலும் வணிக அகழாய்வுகளும்
|
15. கணிதவியல், வானியல், இயற்பியல், வேதியல்
|
16. பொறியியல், தொழில்நுட்பவியல்
|
17. மானிடவியல், சமூகவியல், புவியியல்,
நிலவியல்
|
18. சட்டவியல், அரசியல்
|
19. பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல்
|
20. மருந்தியல், உடலியல், நலவியல்
|
21. தமிழ் மருத்துவ நூல்கள் (சித்தம்,
ஆயுர்வேதம்)
|
22. சமயம், ஆன்மிகம், அளவையியல்
|
23. கல்வியியல், உளவியல்
|
24. வேளாண்மையியல், கால்நடையியல்
|
25. சுற்றுப்புறவியல்
|
26. கணினியில்
|
27. நாட்டுப்புறவியல்
|
28. வெளிநாட்டுத் தமிழ் இலக்கியம்
|
29. இதழியல், தகவல்தொடர்பு
|
30. பிற சிறப்பு வெளியீடுகள்
|
31. விளையாட்டு
|
|
5. பரிசுப் போட்டிக்குக் கருதப்படும்
நூல்களின் முதல் பதிப்பானது, போட்டிக்குரிய ஆண்டில் சனவரி முதல்
நாளிலிருந்து திசம்பர் 31-க்குள் அச்சிடப்பட்டு வெளியிடப்பெற்றிருக்கவேண்டும்.
|
|
6. நூலாசிரியர்/பதிப்பகத்தார்
ஒப்பம் அல்லது இசைவுக் கடிதத்துடன் அனுப்பப்பெறும் விண்ணப்பங்கள் போட்டிக்கு கருதப்பெறும்.
|
|
7. நூலாசிரியர் ஒப்பமோ இசைவோ இன்றி
வரும் நூல்கள் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் பதிப்பகத்தாருக்கு மட்டுமே பரிசளிக்கப்டும்.நூலாசிரியருக்குப்
பரிசுகள் வழங்கப்படா. பதிப்பகத்தார் ஒப்பமோ இசைவோ இன்றி வரும் நூல்கள் பரிசுக்குத்
தேர்ந்தெடுக்கப்ட்டால் பதிப்பகத்திற்கான பரிசுகள் வழங்கப்படமாட்டா.
|
|
8. இப்போட்டிக்காகப் பெறப்படும்
நூல்களை அரசாங்கத்தால் அமர்த்தப்பெறும் நிலைக்குழு ஆய்ந்து பரிசுக்குரிய நூல்களைத்
தேர்ந்தெடுக்கும்.
|
|
9. குறிப்பிட்டதொரு நூல் எந்த வகைப்பாட்டைச்
சார்ந்தது என்று படிவத்தில் குறிப்பிடப்படாத நேர்வில் விண்ணப்பம் ஏற்கப்படமாட்டாது.
|
|
10. வாழும் ஆசிரியர்களின்
நூல்களுக்கும், நூல்வெளியிடப் பெற்றபோது வாழ்ந்துகொண்டிருந்த ஆசிரியர்களின் நூல்கள்
மட்டுமே இத்திட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படும். நேர்வுக்கேற்ப நூலாசிரியருக்கோ, அவர்களுடைய
மரபுரிமையாளர்களுக்கோ பரிசுகள் வழங்கப்பெறும்.
|
|
11. அரசால் ஏற்கப்பட்டுள்ள
சீரமைக்கப்பெற்ற எழுத்துக்களில் அச்சிடப்பெற்ற நூல்கள் மட்டுமே போட்டிக்கு கருதப்படும்.
|
|
12. தொகுப்பாக அமையும் குறுநாவல்கள்,
சிறுகதை என்னும் தலைப்பில் அடங்கும்.
|
|
13. போட்டிக்கு வரப்பெறும்
நூல்களில் முன்னுரை முதலியன உட்பட இரட்டை கிரவுண் அளவில் 150 பக்கங்களுக்குக் குறையாமலும்,
டெம்மி அளவில் 130 பக்கங்களுக்கு குறையாமலும் இருக்க வேண்டும். மரபுக் கவிதை, புதுக்கவிதை,
சிறுவர் இலக்கியம் ஆகிய மூன்று தலைப்ப்களுக்கும் பக்க வரையறை இல்லை. கவிதை, சிறுவர்
இலக்கியம் உட்பட அனைத்து வகைப்பாடுகளின் கீழான நூல்களுக்கு கிரவுண் அளவுக்குக் குறையக்கூடாது.
|
|
14. ஒவ்வொரு தலைப்பிலும் "சிறந்த
நூல்" ஒவ்வொன்றிற்கும் முதற்பரிசாக ரூ. 10.000/- வழங்கப்பெறும். நூல்களின் பதிப்பகத்தினருக்கு
ஒவ்வொரு நூலிற்கும் பரிசுத்தொகை ரூ 2000/- வழங்கப்பெறும். நூலாசிரியருக்கும் பதிப்பகத்தினருக்கும்
சான்றிதழ்களும் வழங்கப்பெறும்.
|
|
15. ஒரு தலைப்பில் ஒரு நூல்
மட்டுமே வரப்பெற்றால் அத்தலைப்பில் பரிசு வழங்க இயலாது.
|
|
16. ஒரு தலைப்பில்/வகைப்பாட்டில்
இருமுறை பரிசு பெற்ற நூலாசிரியர் அதே தலைப்பில்/வகைப்பாட்டில் மூன்றாவது முறையாகப்
பரிசு பெற இயலாது.
|
|
17. மைய/மாநில அரசின் நிதியுதவி
அல்லது பரிசு பெற்ற எந்நூலும் இப்பரிசுப் போட்டிக்கு கருதப்படமாட்டாது.
|
|
18. பரிசுபெறும் நூல், நூலாசிரியர்களின்
கூட்டு முயற்சியால் ஆக்கப்பட்டதாயின் அந்நூலின் பரிசுத்தொகை அந்நூலாசிரியர்களுக்குப்
பகிர்ந்தளிக்கப்படும்.
|
|
19. அயல்நாட்டு நூலாசிரியரால் எழுதப்பெற்ற
ஒரு நூல் பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் தொடர்புடைய ஆசிரியருக்குப் பாராட்டுச்
சான்றிதழ் மட்டுமே வழங்கப்படும்.
|
|
20. பாடநூலில் இடம்பெற்றுள்ள நூல்கள்
பரிசுப் போட்டிக்குக் கருதப்படமாட்டா.
|
|
21. போட்டிக்காக வரப்பெற்ற நூல்களை
எக்காரணத்தைக் கொண்டும் திருப்பியனுப்ப இயலாது.
|
|
22. பரிசுக்குரிய நூல்கள் விவரம்
அரசின் ஏற்புடன் அறிவிக்கப்பெறும். திருவள்ளுவர் திருநாள் விழாவில் பரிசுகள் வழங்கப்பெறும்.
|
|
23. அறக்கட்டளை சொற்பொழிவுகள்,
பிற சொற்பொழிவுகள், பல்கலைக் கழகப் பட்டங்களுக்கு அளிக்கப்பெற்ற ஆய்வேடுகள், நாளிதழ்களில்
தொடராக வெளியிடப்பெற்றவை, வானொலி, தொலைக்காட்சியில் தொடராக இடம் பெற்றவை (கவிதை, உரை
நீங்கலாக) நூலாக ஆக்கப்பட்டிருப்பின் அவை இப்போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்படமாட்டா.
|
|
24. பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட
இந்தியாவிலுள்ள வெளியூர் நூலாசிரியர்களுக்கும் பதிப்பகத்தினருக்கும், அவர்கள் பரிசுத்
தொகையினையும் பாராட்டுச் சான்றிதழையும் பெறுவதற்காகச் சென்னை வந்து திரும்புவதற்காக,
இருப்பூர்தியில் இரு வழி இரண்டாம் வகுப்பு சாதாரணக் கட்டணம் அளிக்கப்பெறும். சென்னையில்
வசிப்பவர்களுக்கு போக்குவரத்துப் படி அளிக்கப்படும். வெளிநாட்டினருக்குப் பயணப்படி
எதுவும் வழங்கப்பெறமாட்டாது.
|
|
25. இத்திட்டம் தொடர்பான விதிகளை
தேவைக்கேற்ப அவ்வப்போது திருத்தவோ, மாற்றவோ, நீக்கவோ அரசுக்கு அதிகாரம் உண்டு.
|
|
26. இத்திட்டத்தைச் செயற்படுத்துவதில்
எழக்கூடிய இடர்பாடுகள் குறித்து அரசால் மேற்கொள்ளப்படும் முடிவே இறுதியானதாகும். அம்முடிவினை
நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தோ பிற வகையிலோ எதிர்த்தல் கூடாது.
|
|
27. இப்போட்டியில் கலந்து கொள்ள
ஒவ்வொரு நூலுக்கும் பதிவுக்கட்டணமாக ரூ 100/- செலுத்த வேண்டும்.
|
|
நிறைவு செய்யப்பெற்ற விண்ணப்பங்கள் வந்து சேருவதற்குரிய
கடைசிநாள் ஒவ்வோராண்டும் சூன் திங்கள் 30 ஆம் நாள்.
|
|
|